தமிழ்நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம் சார்பில் அகராதியியல் விழிப்புணர்வு கருத்தரங்கம், தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் த. அறவாழி தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் ரா.இளவரசி வரவேற்றார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்குநர் தங்க. காமராசு விளக்கவுரை ஆற்றினார். சிறந்த தமிழ்க் கலைச்சொல் வழங்கிய மாணவிகளுக்கு, தஞ்சை தமிழ்ப் பல்லைக்கழகத் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். "மீனவத் தொழிற் கலைச் சொற்கள்' என்ற பொருண்மையில் பூம்புகார் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் நா. சாந்தகுமாரி சிறப்புரை ஆற்றினார். தஞ்சைப் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ்க்கல்வித்துறை பேராசிரியர் ரா.குறிஞ்சிவேந்தன் "அயலகத் தமிழ்க்கலைச் சொற்கள்' என்ற பொருண்மையில் சிறப்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக இளமுருகுப் பொற்செல்வன் பங்கேற்றார். விழாவில் தமிழில் கையொப்பமிட்ட படச்சட்டம் வெளியிடப்பட்டது. விழாவினை, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சுமதி தொகுத்து வழங்கினார். அகரமுதலித் திட்ட பதிப்பாசிரியர் மா.பூங்குன்றன் நன்றி தெரிவித்தார்.