நாகப்பட்டினம்

விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்ட முகாம்

13th Sep 2019 10:06 AM

ADVERTISEMENT

குத்தாலம் அருகேயுள்ள அசிக்காடு கிராமத்தில் வியாழக்கிழமை விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்த முகாம் நடைபெற்றது. 
முகாமில், இத்திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ள சிறு, குறு விவசாயிகள் பதிவு செய்யலாம். இதில் உறுப்பினர்களாக சேரும் 29 வயது உடையவர்கள் மாதந்தோறும் ரூ.100 வீதம் 40 வயது வரை செலுத்த வேண்டும். 
விவசாயிகள் செலுத்தும் தொகை அடிப்படையில் அரசு பங்களிப்பு வழங்கும். 60 வயதுக்குப் பிறகு மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். இறப்புக்குப் பின் குடும்பத்திற்கு பாதி ஓய்வூதியம் வழங்கப்படும். திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யும் போது தங்களின் ஆதார் அட்டை, செல்லிடப்பேசி எண், வங்கிக் கணக்கு புத்தகம் போன்றவற்றை எடுத்து வரவேண்டும் என்று
விளக்கப்பட்டது. 
முகாமில் உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவகுமார், அலெக்ஸாண்டர்,  அட்மா திட்ட மேலாளர் அரவிந்தன், கிராம நிர்வாக அலுவலர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT