நாகப்பட்டினம்

தரங்கம்பாடி பள்ளி ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது

10th Sep 2019 10:04 AM

ADVERTISEMENT

தரங்கம்பாடி புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. 
தரங்கம்பாடி புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருபவர் குழந்தை தெரஸ். ஆசிரியை குழந்தை தெரஸ் திருமணம் செய்து கொள்ளாமல் மாணவர்களுக்கு கல்வி சேவையை அளிப்பதையே தனது வாழ்க்கையாக கருதி சேவை செய்து வருகிறார். இவரின் கல்வி சேவையை பாராட்டி தமிழக அரசு அரசு நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்து, விருதை சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விருது வழங்கினார். விருது பெற்ற ஆசிரியைக்கு பள்ளித் தாளாளர் கருணா ஜோசப் பாட், தலைமையாசிரியர் செசிலி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT