நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்:  3 இளைஞர்கள் உயிரிழப்பு

7th Sep 2019 07:25 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 3 இளைஞர்கள் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனர்.
வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியைச் சேர்ந்த தினேஷ் (26), செல்வம் (25), அருண் (22) ஆகிய மூவரும் ஓர் இருசக்கர வாகனத்தில் நாகையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். 
பழங்கள்ளிமேடு கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் (26), கருணாகரன் (27) ஆகிய இருவரும் மற்றோர் இருசக்கர வாகனத்தில் நாகையில் இருந்து கள்ளிமேடு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், வெள்ளப்பள்ளம் வேப்பமரத்தடி நிறுத்தம் அருகே வந்தபோது, இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தினேஷ், செல்வம், கருணாகரன் ஆகிய மூவரும் அவ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற இருவரும் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீஸார் வழக்குப் பதிந்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT