நாகப்பட்டினம்

விநாயகர் ஊர்வலத்தின்போது கார் சேதம்: இருவர் மீது வழக்குப்பதிவு

7th Sep 2019 07:28 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்ற இருவர், அவ்வழியே சென்ற நபரின் காரை சேதப்படுத்தி, மிரட்டியதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், கதிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் முருகன். இவர் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி குடும்பத்தினருடன் மயிலாடுதுறை கால்டாக்ஸ் பகுதியில் காரில் வந்துள்ளார். அப்போது எதிரில் விநாயகர் ஊர்வலம் வந்துள்ளது. ஊர்வலத்தில் பங்கேற்ற சேந்தங்குடியைச் சேர்ந்த பிரசன்னா, மகேஷ்குமார் ஆகியோர், முருகனின் காரின் மீது ஏறி, அவரையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டினராம். இதில், முருகனின் காரின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து, முருகன் அளித்த புகாரின் அடிப்படையில், மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT