நாகப்பட்டினம்

மாயூரநாதர் கோயில் குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்: மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதி

7th Sep 2019 07:26 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் குளத்தில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டதால், குளத்தில் இருந்த மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான, தொன்மைவாய்ந்த அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு மயிலாடுதுறை மட்டுமன்றி வெளியூர்களில் இருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இக்கோயில் குளத்தில், புதைசாக்கடை குழாயில் இருந்து வெளியேறிய கழிவுநீர் அண்மையில் கலந்தது. இதையடுத்து, அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கோயில் நிர்வாகம், குளத்தின் நீரை போர்வெல் மூலமாக முழுவதும் வெளியேற்றியது.

இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், குளத்தில் இருந்த மீன்கள் இறந்துள்ளன. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர். குளத்தில் இறந்து கிடக்கும் மீன்களை முழுமையாக அகற்றி, சுகாதாரமாக மாற்றிய பின்னரே, மீண்டும் குளத்தில் புதிய நீரை நிரப்ப வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT