நாகப்பட்டினம்

காவிரியை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி

7th Sep 2019 07:24 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் ஈஷா யோகா மையத்தின் சார்பில், காவிரியின் கூக்கூரல் என்ற பெயரில், காவிரி ஆற்றைப் பாதுகாக்க வலியுறுத்தி, விழிப்புணர்வுப் பேரணி  வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை டிஇஎல்சி பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை, வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். வர்த்தக சங்க நிர்வாகி மதியழகன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் வீராசாமி, மணி, பேராசிரியர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பேரணியில், தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று, காவிரியை பாதுகாக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். பேரணி காந்திஜி சாலை, மணிக்கூண்டு, பட்டமங்கலத்தெரு வழியே சென்று காவிரி துலாக்கட்டத்தில் நிறைவடைந்தது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT