நாகப்பட்டினம்

அம்பேத்கர் சிலைக்கான இரும்புக் கூண்டை  விலக்க வேண்டுகோள்

7th Sep 2019 07:25 AM

ADVERTISEMENT

வேதாரண்யத்தில் அரசு தரப்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைக்கு பாதுகாப்பு என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கூண்டை விலக்கிக் கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யத்தில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதனால், அரசு சார்பில் உடனடியாக அதே இடத்தில் புதிய சிலை நிறுவப்பட்டது.
அம்பேத்கரின் புதிய சிலைக்கு பல்வேறு அமைப்பினர் நாள்தோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமைக்கான இயக்கம் சார்பில், அதன் மாநிலச் செயலாளர் எஸ்.கே.சிவா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.  
அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
அரசிடம் உள்ள விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவை இப்பகுதிக்கு அனுப்பி, அம்பேத்கர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எல்லா இடங்களில் இருப்பதைப் போலவே இங்குள்ள அம்பேத்கர் சிலையும் திறந்த நிலையில் இருந்ததுதான். தற்போது, சிலைக்கு பாதுகாப்பு என்ற பெயரில் இரும்புக் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். கூண்டை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், அமைப்பின் மாநில நிர்வாகிகள் அசரப் அலி, எஸ்.பாஸ்கர், கல்யாணசுந்தரம், இளைஞர் பெருமன்ற நிர்வாகி பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சிவகுரு.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT