நாகப்பட்டினம்

அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா: திரளானோர் பங்கேற்பு

7th Sep 2019 07:27 AM

ADVERTISEMENT

நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை  முத்துமாரியம்மன் கோயில் செடில் திருவிழாவின் பூச்சொரிதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 
அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் செடில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டுக்கான செடில் திருவிழாவின் தொடக்கமாக பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி, இரவு 7 மணி அளவில் கீச்சாங்குப்பம் காளியம்மன் கோயிலிலிருந்து பூ தட்டுகள் ஊர்வலம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பூ தட்டுகளுடன் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.  இந்த ஊர்வலம், அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயிலை அடைந்ததும், அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பூச்சொரிதல் நடைபெற்றது.
கொடியேற்றம்...
முத்துமாரியம்மன் கோயில் செடில் திருவிழா திருக்கொடியேற்றம் சனிக்கிழமை காலை (செப்டம்பர் 7) 8.30 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக, காலை 6 மணி முதல் 7.30 மணி வரை கொடி வீதியுலா 
நடைபெறுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT