நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் அருங்கொடை செப வழிபாடு

4th Sep 2019 07:00 AM

ADVERTISEMENT

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவின் 6-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை நவநாள் செப வழிபாடு, திருக்கொடியேற்றம், தேர்பவனி ஆகியவை நடைபெற்றன.

பசலிக்கா அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா ஆகஸ்ட் 29- ஆம் தேதி  வியாழக்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி,கடந்த 6  நாள்களாக பேராலயத்தில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றுவருகின்றன.

ஆண்டுப் பெருவிழாவின் 6-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பேராலய கீழ்க்கோயில், மேல்கோயில், விண்மீன் ஆலயம், மாதாகுளம் ஆகியவற்றில் நவநாள் செப வழிபாடுகள், மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பகல் 12 மணியளவில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் ஆரோக்கியதாஸ் கலந்துகொண்டு, புனிதம் செய்வித்து, திருக்கொடியை ஏற்றி வைத்தார். 

இதேபோல், பேராலய கீழ்கோயிலில் தமிழ்,ஆங்கிலம், மராத்தி மற்றும் கொங்கனி மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. மாலை 4 முதல் 5 மணி வரை அருங்கொடைசெப வழிபாடுகள் நடைபெற்றன.  

ADVERTISEMENT

இரவு  நிகழ்ச்சியாக மாதா தேர்பவனி நடைபெற்றது.  மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் ஆரோக்கியதாஸ் புனிதம் செய்வித்து, தேர்பவனியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT