நாகப்பட்டினம்

வேதாரண்யம் சம்பவம்: மேலும் இருவர் கைது

4th Sep 2019 06:59 AM

ADVERTISEMENT

வேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக மேலும் இருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வேதாரண்யத்தில் ஆகஸ்ட் 25- ஆம் தேதி இருபிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் கார் தீவைத்து எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, ஏற்கெனவே இருதரப்பிலும் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியது தொடர்பாக வேதாரண்யம் மேலத் தெருவைச் சேர்ந்த பா.மோகன் என்ற மோகன்ராஜ் (27), ராசேந்திரன் மகன் பாபு(29) ஆகிய இருவர் வேதாரண்யம் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT