நாகப்பட்டினம்

மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

4th Sep 2019 07:01 AM

ADVERTISEMENT

திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்காக இம்முகாம் நடைபெற்றது. இதில், பார்வையின்மை, குறைபார்வை, செவித்திறன் குறைபாடு, உடலியக்க குறைபாடு, முடக்குவாதம், எலும்பு முறிவு உள்ளிட்ட 21 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இம்முகாமில் பங்கேற்ற மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு அடையாள அட்டை மற்றும் கல்வி உதவித் தொகை, மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த முகாமுக்கு இடைநிலைக் கல்வி உதவித் திட்ட அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்பசிவம், உதவித் திட்ட அலுவலர் பீட்டர் பிரான்சிஸ், வட்டாரக் கல்வி அலுவலர்கள் இளங்கோவன், ராஜமாணிக்கம், திருமருகல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ)அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகை மாவட்ட அரசு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில், வட்டார வளமைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பவித்ராவைதேகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT