நாகப்பட்டினம்

மயிலாடுதுறை குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்குப் பாராட்டு

4th Sep 2019 07:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் நடைபெற்ற குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
பள்ளி கல்வித் துறையால், மயிலாடுதுறை குறுவட்ட அளவில் பாரதியார் தின, குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் மயிலாடுதுறையில் அண்மையில் நடைபெற்றன. இதில்,  தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 19 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் கையுந்து பந்து, எறிப்பந்து போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று, மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர். அதே பிரிவில் கபடி, கூடைப்பந்து போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இம்மாணவர்களையும், இவர்களுக்குப் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர்  ப. தேகளீசன் ஆகியோரை, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கு. தாமரைச்செல்வன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT