நாகப்பட்டினம்

பழையார் விசைப்படகு மீனவர்கள்: செப். 10 முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடிவு

4th Sep 2019 07:04 AM

ADVERTISEMENT

சீர்காழி அருகே பழையாறு விசைப்படகு மீனவர்கள் 50 நாள்களுக்குப் பிறகு செப்டம்பர் 10- ஆம் தேதி முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடிவு செய்துள்ளனர்.
பழையார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் சில விசைப்படகுகளில் தடை செய்யப்பட்ட அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பதற்கு, பதிவு செய்யப்பட்ட மற்றும் மீன்பிடி துறையால் அங்கீகரிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். 
இதுதொடர்பாக, இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த ஜூலை மாதம் 20- ஆம் தேதி முதல் இருதரப்பு விசைப் படகுகளும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இப்பிரச்னையில், சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. 
இந்நிலையில், மயிலாடுதுறை கோட்டாட்சியர் கண்மணி தலைமையில் ஆகஸ்ட் 31- ஆம் தேதி மீன்பிடித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் 
மற்றும் மீனவப்பிரதிநிதிகள் கலந்து கொண்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், செப்டம்பர் 8- ஆம் தேதிக்குள் அதி வேக எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப் படகுகளை, பழையார் துறைமுகத்தை விட்டு அகற்றவும், மீறி துறைமுகத்தில் அதிவேக விசைப் படகுகளை நிறுத்தினால், சட்டப்பட்டி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து, பழையார் விசைப்படகு உரிமையாளர் சங்கத் தலைவர் அருள்செழியன்
கூறியது:
கடந்த ஜூலை 20- ஆம் தேதி முதல் விசைப் படகு உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெறுகிறது. அமைதிப்பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் படி அதிவேக விசைப்படகுகள் பழையாறு துறைமுகத்திலிருந்து செப்டம்பர் 8- ஆம் தேதிக்குள் அப்புறப்படுத்தியவுடன் 50 நாள்களுக்குப் பிறகு வருகிற 10- ஆம் தேதி முதல் விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளனது என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT