நாகப்பட்டினம்

பயிர்க் காப்பீட்டுத் தொகைக் கோரி காத்திருப்புப் போராட்டம்

4th Sep 2019 06:58 AM

ADVERTISEMENT

திருக்கடையூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, விடுபட்டவர்களுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கட்சியின் கிளைச் செயலாளர்கள் ஜீவானந்தம், பரமசிவம் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டச் செயலாளர் சீனிவாசன் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார். 
திருக்கடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 1875 விவசாயிகள்  2017-2018- ஆம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீடு செய்த  நிலையில், 1804 விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. காழியப்பநல்லூர்,டி .மணல்மேடு, பிள்ளைபெருமாள்நல்லூர், மாணிக்கப்பங்கு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 71 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 
இதைக் கண்டித்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் சிம்சன், ராசையன், ரவிச்சந்திரன்,  வட்டக் குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, ஜி. இளையராஜா, கிளைச் செயலாளர்கள் செல்வம், கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காலை முதல் மாலை  வரை போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான நாகை மாலி போராட்டத்தை முடித்து வைத்தார். இதில், விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT