நாகப்பட்டினம்

நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு

4th Sep 2019 06:57 AM

ADVERTISEMENT

கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற நீச்சல் போட்டியில் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி மாணவர்கள் 3 பேர் வெற்றி பெற்றனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு இடையேயான  நீச்சல் போட்டிகள் அண்மையில் புதுக்கோட்டையில்  நடைபெற்றது. 13  கல்லூரிகளைச் சேர்ந்த  30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
இதில், நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் ராகுல் 50 மீட்டர் ப்ரீ ஸ்டோக் போட்டியில் 2- ஆம் இடமும், 200 மீட்டர் ப்ரீ ஸ்டைல் போட்டியில் மாணவி அனுசுயா  2-ஆம் இடமும், புஷ்பலதா 3- ஆம் இடமும் பெற்றனர்.
நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சியாளர்கள் வேலவன், சசிகலா ஆகியோருக்கு கல்லூரி செயலாளர் பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினர் சங்கர்கணேஷ், முதல்வர் நடராஜன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT