நாகப்பட்டினம்

நாகை ஊராட்சி ஒன்றிய வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

4th Sep 2019 07:03 AM

ADVERTISEMENT

நாகை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
நாகையை அடுத்த தெத்தி ஊராட்சியில் 2019-2020 குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ரூ. 56 ஆயிரம் மதிப்பில் நடைபெறும் குளம் தூர்வாரும் பணி, ரூ. 77 ஆயிரம் மதிப்பில் நடைபெறும் மேலநாகூர் ஒத்தகுளம் தூர்வாரும் பணி, முட்டம் ஊராட்சியில் உபரி நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 2.5 லட்சம் மதிப்பில் நடைபெறும் பைப்லைன் விரிவாக்கப் பணி ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், பொரவாச்சேரி கிராமத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 79.63 லட்சம் மதிப்பில் நடைபெறும் ஏ.டி காலனி சாலை மேம்பாட்டுப் பணிகள், சிக்கல் கிராமத்தில் உபரி நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 2.84 லட்சம் மதிப்பில் நடைபெறும் மோட்டார் மற்றும் மோட்டார் அறை அமைக்கும் பணி, ஆலங்குடி கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 53.93 லட்சம் மதிப்பில் நடைபெறும் ஆலங்குடி - கங்கா ஒரத்தூர் சாலை மேம்பாட்டு பணி, சங்கமங்கலம் கிராமத்தில் ரூ. 2.8 லட்சம் மதிப்பில் நடைபெறும் போர்வெல் அமைக்கும் பணி மற்றும் பைப் லைன் விரிவாக்கப் பணி ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
இந்த ஆய்வுகளின் போது, வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் குடிமராமத்துப் பணிகள் உரிய காலத்தில், உரிய தரத்தில் நடைபெறுவதை, அரசுத் துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார். 
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அ. தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றிச்செல்வன், செபஸ்டியம்மாள், உதவிப் பொறியாளர்கள் தண்டபாணி, கலையரசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT