நாகப்பட்டினம்

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்ற ஆசிரியருக்குப் பாராட்டு

4th Sep 2019 07:01 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ள சீர்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆசிரியை தா. சரோஜாவுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
2018-2019-ஆம் கல்வியாண்டுக்கான தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதுக்கு  ஆசிரியை தா. சரோஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, ஆசிரியை தா. சரோஜாவுக்கு பள்ளி தலைவர் கே.வி. ராதாகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன், பள்ளி முதல்வர் ஜோசுவா பிரபாகரசிங் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT