நாகப்பட்டினம்

நதிகளைக் காப்போம் விழிப்புணர்வுப் பிரசாரம்

4th Sep 2019 06:57 AM

ADVERTISEMENT

ஈஷா அமைப்பு சார்பில் நதிகளைக் காப்போம் பிரசாரம் நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காவிரிஆற்றை பாதுகாக்கும் வகையில் ஈஷாஅமைப்பு  சார்பில் காவிரிஆறு  வடிநிலங்களில் 242 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் 73 கோடி மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.
இதுகுறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஈஷாஅமைப்பின் தலைவர் ஜக்கி வாசுதேவ் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். தலைக்காவிரியில் தொடங்கும் இந்த பிரசாரம் திருவாரூரில் நிறைவடைகிறது.
இந்த பிரசாரம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்  வகையில் நாகை ஏ. டி. ஜே. தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி முன்பு நதிகளைக் காப்போம் எனும் தலைப்பில் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஈஷா அமைப்பின் தன்னார்வலர்கள் வி.சி. ரவி, ஜி. சிவசண்முகம், கல்லூரி முதல்வர் ஜி. செந்தில்குமார், பேராசிரியர்  எஸ். ராஜசேகரன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT