நாகப்பட்டினம்

திருமருகலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

4th Sep 2019 07:00 AM

ADVERTISEMENT

திருமருகலில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமருகல் பிரதான சாலை, சந்தைப் பேட்டை, சின்னக்கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதால், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பெரிதும் இடையூறு ஏற்படுவதாக திருமருகல் ஊராட்சி நிர்வாகத்துக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த 5 நாள்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்களே அகற்றும் படி ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனாலும், சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் க. அன்பரசு, ஆர்.ஜி. இளங்கோவன், திருமருகல் சரக வருவாய் அலுவலர் பிரபாகரன், ஊராட்சி செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் திருமருகல் கடை வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், வருவாய்த் துறை ஊழியர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறைப் பணியாளர்கள் 
ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT