நாகப்பட்டினம்

தருமபுரம் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பயிற்சி

4th Sep 2019 07:02 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் சமூகப்பணித் துறை மற்றும் காவிரி கிராம மேம்பாட்டு அமைப்பு சார்பில் உடல்நலம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு, கல்லூரி செயலாளர் எம். திருநாவுக்கரசு தலைமை வகித்தார். காவிரி அமைப்பின் நிர்வாகிகள் சிவக்குமார், அகஸ்டின் விஜய், வழக்குரைஞர் சிவச்சந்திரன், சுந்தர், தெட்சிணாமூர்த்தி, சமூகப்பணித் துறை உதவிப் பேராசிரியர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி சமூகப் பணித் துறைத் தலைவர் சோபியா வரவேற்றார். காவிரி கிராம மேம்பாட்டு அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜீலியஸ் தூயமணி கருத்தரங்கத்தின் நோக்கம் குறித்து பேசினார். சென்னை மேக்ட் இந்தியா தொண்டு நிறுவனத்தின் பயிற்சியாளர் செல்வகுமார் உடல்நலம் மற்றும் சுகாதாரம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சியளித்தார். 
இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் எஸ். சாமிநாதன் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார். கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், காவிரி அமைப்பின் கற்றலின் இனிமை மற்றும் செயல்திறன் மேம்பாட்டு மைய பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர். மாணவிகள் அமிர்தசுந்தரி, அனிதா, அபிநயா ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். சமூகப்பணித் துறை உதவிப் பேராசிரியர் திவ்யா நன்றி கூறினார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT