நாகப்பட்டினம்

தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்குப் பாராட்டு

4th Sep 2019 07:04 AM

ADVERTISEMENT

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த ஊராட்சிப் பள்ளி மாணவிக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
திருமருகல் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள், நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில், 14 வயதுக்குள்பட்ட மாணவியருக்கான பிரிவில், திருமருகல் ஒன்றியம், குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி புஷ்பா 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றார். 
இதையொட்டி, இம்மாணவிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்லம்மாள், ஆசிரியர்கள் தமிழ்செல்வி, சண்முகநாதன், கோகிலா, உடற்கல்வி ஆசிரியர் சந்தோஷ் காட்சன் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT