நாகப்பட்டினம்

சிறப்பு குறைதீர் முகாம்

4th Sep 2019 07:03 AM

ADVERTISEMENT

தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம் கங்களாஞ்சேரி வருவாய் சரக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கங்களாஞ்சேரி வருவாய் சரக அலுவலர் சந்திரசேகரன் தலைமை வகித்து, பொதுமக்களிடம்  கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். இதில், விற்குடி, வாழ்குடி, கங்களாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50- க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு  மனுக்கள் அளித்தனர். குறிப்பாக முதியோர் உதவித் தொகை, விதவையர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா கோரி மனுக்கள் அளிக்கப்பட்ன. முகாமில் கிராம நிர்வாக அலுவலர் செந்தில், கிராம உதவியாளர் வெற்றிச்செல்வன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT