நாகப்பட்டினம்

சிறப்பு குறைதீர் முகாம்: விஏஓ அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் கோரிக்கை: மனுக்களை வாசலில் வைத்துவிட்டுச் சென்ற மக்கள்

4th Sep 2019 06:55 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், திருக்கடையூரில் சிறப்புக் குறைதீர்க்கும் முகாமுக்கு அதிகாரிகள் வராமல், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் பூட்டிக் கிடந்ததால், பொதுமக்கள் அலுவலக வாசலில் கோரிக்கை மனுக்களை வைத்துவிட்டுச் சென்றனர்.
திருக்கடையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வரின் சிறப்புக் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அங்கு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்  கோரிக்கை மனுக்கள் அளிக்க வந்தனர்.  
ஆனால், அதிகாரிகள் வராமல் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதனால், பல மணி நேரம் காத்திருந்து, மனுக்களை அலுவலக வாசலில் வைத்துவிட்டுச் சென்றனர்.
இதுகுறித்து, காழியப்பநல்லூரைச் சேர்ந்த விவசாயி அருள்தாஸ் கூறியது:
முகாம் நடைபெறும் என அறிவிப்பு செய்து விட்டு, அலுவலகத்தை பூட்டி சென்றது கண்டனத்துக்குரியது. பிள்ளைபெருமாநல்லூர், காழியப்பநல்லூர், திருக்கடையூர் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் வேளாண் துறை சார்பில் எந்த அதிகாரியும் வராமல் அலுவலகம் பூட்டிக் கிடந்ததால் மனுக்களை வாசலிலேயே வைத்துவிட்டு 
வந்தோம் என்றார் அவர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT