நாகப்பட்டினம்

சிறந்த பள்ளியாக காவிரிபூம்பட்டினம் அரசு நடுநிலைப் பள்ளி தேர்வு

4th Sep 2019 07:01 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், காவிரிபூம்பட்டினம் மீனவர் அரசினர் நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு பரிசு பெற்றுள்ளது. 
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு கொண்டாடிவருகிறது. இதை சிறப்பாக நடத்தும் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அரசு ரூ. 25 ஆயிரம் வழங்கி வருகிறது. நிகழாண்டில், சிறந்த பள்ளியாக காவிரிபூம்பட்டினம் மீனவர் அரசினர் நடுநிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் பள்ளித் தலைமையாசிரியர் அன்பழகனிடம் வழங்கினார். அப்போது, சீர்காழி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பூவராகவன், லெட்சுமி ஆகியோர் உடனிருந்தனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT