நாகப்பட்டினம்

குத்தாலம், பெரம்பூர்  பகுதிகளில் நாளை மின்தடை

4th Sep 2019 06:59 AM

ADVERTISEMENT

பெரம்பூர் மற்றும் கடலங்குடி பகுதியில் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) வை. முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பூர் மற்றும் கடலங்குடி துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பெரம்பூர் மற்றும் கடலங்குடி துணை மின் நிலையங்களில் இருந்து, மின் விநியோகம் பெறும் பகுதிகளான பெரம்பூர், கடக்கம், கிளியனூர், சேத்தூர், முத்தூர், எடக்குடி, பாலூர், கொடைவிளாகம், ஆத்தூர், கடலங்குடி, வாணாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிகுத்தி, முருகமங்கலம், திருமணஞ்சேரி, ஆலங்குடி மற்றும் குத்தாலம் ஆகிய ஊர்களுக்கும், அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT