நாகப்பட்டினம்

ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளருக்குப் பாராட்டு

4th Sep 2019 07:02 AM

ADVERTISEMENT

நாகை மாவட்ட காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு நாகை எஸ்.பி. பாராட்டுச் சான்று வழங்கினார்.
வேளாங்கண்ணி காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராக  பணியாற்றி பின்னர் அயல் பணியில் சென்று நாகை மதுவிலக்கு அமல் பிரிவில் எழுத்தராக பணியாற்றிய வெங்கேடசன் ஆகஸ்ட் 31-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசனின் பணியை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜேசகரன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கெளரவித்தார். 
அப்போது, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகேஷ், துணைக் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் மற்றும் போலீஸார் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT