நாகப்பட்டினம்

உரிமம் பெறாத ஐஸ் உற்பத்தி நிலையத்துக்கு நோட்டீஸ்

4th Sep 2019 06:56 AM

ADVERTISEMENT

நாகையில் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் இல்லாமல் இயங்கி வரும் ஐஸ் உற்பத்தி நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. 
நாகை, நல்லியான்தோட்டம் பகுதியில் செயல்படும் ஐஸ் உற்பத்தி நிலையம், உணவுப் பாதுகாப்புத் துறையின் அனுமதியின்றி செயல்படுவதாகக் கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில், நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகன், தொடர்புடைய ஐஸ் கம்பெனியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, அந்த ஐஸ் உற்பத்தி நிலையம் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமத்தைப் பெறவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, உணவுப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற வேண்டும் எனவும், ஊழியர்கள் உரிய வகையில் தன் சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டது.  

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT