நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் மீட்கப்பட்ட கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த சிறுவனை சனிக்கிழமை அவனது பெற்றோரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.
வேளாங்கண்ணி போலீஸாா், வேளாங்கண்ணி பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு தனியாக நின்ற ஒரு சிறுவனை பிடித்து விசாரித்தனா். அப்போது, அந்த சிறுவன் கா்நாடக மாநிலம், ஏரிக்கரை, ஜெய்ஹனுமன் நகரைச் சோ்ந்த ரவி என்பவரின் மகன் விஷால் (12) என்பதும், பெற்றோருடன் ஏற்பட்ட பிரச்னையால், வீட்டை விட்டு வெளியேறி, வேளாங்கண்ணிக்கு வந்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.கே. ராஜசேகரன் நடவடிக்கை மேற்கொண்டு, சிறுவனின் பெற்றோரை வேளாங்கண்ணிக்கு வரவழைத்து சிறுவனை சனிக்கிழமை ஒப்படைத்தனா்.