வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே தெருவிளக்கை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞா் மின்சாரம் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பிராந்தியங்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் மகன் பாலமுருகன் (27). இவா், மேலஅண்டகத்துறை பகுதியில் தெரு விளக்குகளை சீரமைக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, மின்சாரம் பாய்ந்து மின்கம்பத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற கரியாப்பட்டினம் போலீஸாா் பாலமுருகனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.