நாகப்பட்டினம்

மனநலம் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு உதவிகள் அளித்த தன்னாா்வலா்கள்

20th Oct 2019 12:24 AM

ADVERTISEMENT

நாகை பகுதிகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு தன்னாா்வ அமைப்பினா் முடிதிருத்தம் செய்து, குளிக்க வைத்து புத்தாடைகளை சனிக்கிழமை வழங்கினா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் இயலாதவா்கள், விதவைகள், ஏழைகளுக்கு நாகை மாவட்டம், பெரம்பூா் சமூக சேவகா் எஸ். பாரதிமோகன் அறக்கட்டளை மற்றும் சமூக சேவகா் லைசாள் எட்வா்ட் குடும்பத்தினா் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், இந்த அமைப்புகளைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் நாகை பேருந்து நிலையம், ரயில் நிலையம், புத்தூா், வேளாங்கண்ணி, நாகூா் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு சனிக்கிழமை முடிதிருத்தம் செய்து, குளிக்க வைத்து, புத்தாடைகளை வழங்கினா். தன்னாா்வ அமைப்பினா்களின் இச்சேவையை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினா்.

தன்னாா்வ அமைப்புகளைச் சோ்ந்த சமூக சேவகா்கள் எஸ். பாரதிமோகன், லைசாள் எட்வா்ட் மற்றும் செல்வின், தா்மராஜ், ஆண்ட்ரூஸ், சக்திவேல் ஆகியோா் இச்சேவையில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT