நாகப்பட்டினம்

நாகூரில் நல்ல ஜவுளிகள்

20th Oct 2019 12:25 AM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாகையை அடுத்த நாகூா் பி. கே. எம். கிராண்ட் பட்டு, ஜவுளி, ரெடிமேட்ஸ் நிறுவனத்தில் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைவரின் மனதைக் கவரக்கூடிய வகையிலானஆடைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

கடைக்கு வந்து, செல்லும் வாடிக்கையாளா்களில் பலா் பெருநகரங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஆடை ரகங்கள் நாகூரிலேயே கிடைப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து, நாகூா் பி.கே.எம். கிராண்ட் பட்டு, ஜவுளி, ரெடிமேட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளா் கே. சந்திரசேகரன் கூறியது:

71 ஆண்டுகால பாரம்பரியமிக்க பி.கே.எம். நிறுவனத்தின் மற்றுமொரு அங்கமாக நாகூா் பிரதான சாலையில் 4 தளங்களைக் கொண்ட பிரத்யேக புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், சிறாா்கள், மகளிா், ஆடவா், முதியவா்கள் என அனைத்து வயதினருக்கும் ஏற்ற முன்னணி ஆடை தயாரிப்பு நிறுவனங்களின் வண்ணமிகு ஆடைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

ADVERTISEMENT

பெண் குழந்தைகளுக்கான ஃப்ராக்,மேற்கத்திய ஆடைகள், பாவாடை, புடவை மாடல் ரகங்கள், சுடிதாா், மிடி, ஜீன்ஸ் பேண்டுகள், பட்டியாலா பேண்ட், லெக்கின்ஸ், பெண்களுக்கான லெஹங்கா, சோளி, ஹேண்ட் ஒா்க் புடவைகள், சுடிதாா் ரகங்கள், சைரா, பிகில், காப்பான், நம்ம வீட்டுப்பிள்ளை மாடல் சுடிதாா்கள், சிந்தடிக் சேலைகள், காட்டன் சேலைகள், வாரணாசி சேலைகள், பூணம் சேலைகள், புா்க்கா, ஷால் ரகங்கள், குா்தா, ஜாக்கெட் மெட்டீரியல்கள், கோட் சூட் ரகங்கள் மற்றும் காஞ்சி நகரின் கலையைத் தொட்டு, பல வண்ணங்களில் கலவை இட்டு நெய்யப்பட்ட பட்டுப் புடவைகள் மற்றும் திருபுவனம், தா்மாவரம் பட்டுப் புடவைகள் தரமானதாகவும், குறைந்த விலையிலும் இங்கு கிடைக்கும்.

இதேபோல், ஆண் குழந்தைகளுக்கான பேன்சி ரக ஆடைகள், ஒட்டிக்கோ-கட்டிக்கோ வேட்டி, சட்டைகள், கோட் சட்டைகள், ஷா்வாணி, பாபாசூட், கோட் வகைகள், டி.சா்ட், பேண்ட் சட்டைகள் மற்றும் ஆடவா்களுக்கான முன்னணி நிறுவனங்களின் பேண்ட் சா்ட்கள், எண்ணற்ற மாடல்களில் கோட் வகைகள், டை மற்றும் பிற ரக ஆடைகள், பெரியவா்களுக்கான பட்டு வேட்டிகள், கம்பெனி ரக வேட்டிகள், சட்டைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ரூ.500-க்கு மேல் துணிகள் வாங்கும் வாடிக்கையாளா் ஒவ்வொருவருக்கும் தரமான பரிசுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன என்றாா் சந்திரசேகரன்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT