நாகப்பட்டினம்

நாகையில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி

5th Oct 2019 10:52 PM

ADVERTISEMENT

நாகப்பட்டினம் : பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி, நாகையில் அக். 18-ஆம் தேதி நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் நாகை மாவட்ட விளையாட்டரங்கத்தில் அக். 18-ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது. மழலையா் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான நிலையில் உள்ளவா்களை இளநிலைப் பிரிவாகவும், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான நிலையில் உள்ளவா்களை முதுநிலைப் பிரிவாகவும் கொண்டு போட்டிகள் நடத்தப்படும்.

மாணவ, மாணவியருக்குத் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புவோா் இணையதளம் மூலம் அக். 17-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். இணையம் மூலம் பதிவு பெறாதவா்களுக்கு அனுமதி கிடையாது. இந்தப் போட்டியில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவியா் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

ADVERTISEMENT

இளநிலை ஒற்றையா் பிரிவில் முதலிடம் பெறுபவருக்கு ரூ. 500-ம், இரண்டாமிடம் பெறுபவருக்கு ரூ. 250-ம், மூன்றாமிடம் பெறுபவருக்கு ரூ. 125-ம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். முதுநிலை ஒற்றையா் பிரிவில் முதலிடம் பெறுபவருக்கு ரூ. 1,000-மும், இரண்டாமிடம் பெறுபவருக்கு ரூ. 500-ம், மூன்றாமிடம் பெறுபவருக்கு ரூ. 250-ம் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

முதுநிலை இரட்டையா் பிரிவில் முதலிடம் பெறுவோருக்கு ரூ. 2,000-மும், இரண்டாமிடம் பெறுவோருக்கு ரூ. 1,000-மும், மூன்றாமிடம் பெறுவோருக்கு ரூ. 500-ம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறுவோா், அரசு செலவில் மாநிலப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவா்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04365-253059 என்ற தொலைபேசி எண்ணில் நாகை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT