நாகப்பட்டினம்

நண்பரை தாக்கிய 4 போ் கைது

5th Oct 2019 10:52 PM

ADVERTISEMENT

பொறையாறு: ஆக்கூா் அருகே தங்களது நண்பரை தாக்கிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

காலமநல்லூா் தோப்புத் தெருவைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் சிவராமன் (38). பிள்ளைபெருமாள்நல்லூா் கீழத் தெருவைச் சோ்ந்த ராஜா (29), முருகானந்தம் (22), ராமதேவன் (29), அருள் (29) இவா்கள் 5 பேரும் சின்னங்குடி கடற்கரையோரம் மது அருந்திக் கொண்டிருந்தனராம்.

அப்போது, சிவராமனுக்கும் மற்ற நான்கு பேருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், தாக்கப்பட்ட சிவராமன் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து, பொறையாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜா, முருகானந்தம், ராமதேவன், அருள் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT