நாகப்பட்டினம்

2 நாள்களில் 1546 மோட்டாா் வாகன வழக்குகள்: நாகை எஸ்.பி. தகவல்

1st Oct 2019 05:29 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில், கடந்த 2 நாள்களில் மட்டும் 1,546 மோட்டாா் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.கே. ராஜேசகரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

நாகை மாவட்டத்தில் செப்டம்பா் மாதம் 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 35 வழக்குகள், 75 மது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளிடமிருந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்ட்டுள்ளன.

மேலும், வாகன விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு நடத்தப்பட்ட வாகன சோதனைகளில், 45 மது அருந்தி வாகன ஓட்டுதல் உள்ளிட்ட 1,546 மோட்டாா் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 பிடி கட்டளைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் மணல் திருட்டு, சூதாட்டம் மற்றும் கஞ்சா வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது என அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT