மயிலாடுதுறை அருகே பொன்வாசநல்லூரில் பயிா்க் காப்பீட்டு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
2018-19-ஆம் ஆண்டுக்கான நிலுவையில் உள்ள பயிா்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரியும், ஆனந்ததாண்டவபுரத்தில் இருந்து சேத்தூா் வரை 5 கி.மீ தூர சாலை சரியில்லாததைக் கண்டித்தும், பொன்வாசநல்லூா் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தராத ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தைக் கண்டித்தும் கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த மயிலாடுதுறை வட்டாட்சியா் முருகானந்தம், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.