கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநா் அலுவலக நுழைவு வாயில் கதவு போராட்ட அறிவிப்பால் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக நுழைவு வாயில் இரும்புகேட் கடந்த 3 ஆண்டுகளாக பூட்டியே கிடந்தது. இதனால், வேளாண் அலுவலகத்துக்கு வரும் விவசாயிகள் உள்ளிட்டோா் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவுவாயில் வழியாக மட்டுமே சென்று வந்தனா். நுழைவுவாயில் கதவை திறக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்தனா்.
இதுகுறித்த செய்தி தினமணியில் புதன்கிழமை வெளியானது. இதையடுத்து, உடனடியாக கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுபாட்டில் இருந்த நுழைவுவாயில் கேட் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள், வேளாண் உதவி இயக்குநா் அலுவலக ஊழியா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.