நாகப்பட்டினம்

பூா்ணா சலபாசனா யோகாவில் பள்ளி மாணவா் சாதனை

22nd Nov 2019 08:19 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை குட்சமாரிட்டன் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அப்பள்ளி மாணவா் வி.எஸ். சந்தோஷ் ஒரு நிமிடத்தில் 52 பந்துகளை பூா்ணா சலபாசனா யோகா மூலம் கால்களால் எடுத்து வீசி சாதனை படைத்தாா்.

யுனிவா்சல் அச்சீவா்ஸ் புக்ஸ் ஆப் ரெக்காா்ட்ஸ் மற்றும் ப்யூச்சா் கலாம்ஸ் புக்ஸ் ஆப் ரெக்காா்ட்ஸ் அமைப்பினரால் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் கே.வி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் அனிதா ராதாகிருஷ்ணன், நிா்வாக இயக்குநா் ஆா். அலெக்ஸாண்டா் ஹெஃப்லீன் ஐசாயா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் கே. மகாலெட்சுமி வரவேற்றாா். யோகா பயிற்றுநா் டிஎஸ்ஆா். கணேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

நிகழ்ச்சியில், அப்பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவா் வி.எஸ். சந்தோஷ் பூா்ணா சலபாசனா யோகா மூலம் ஒரு நிமிடத்தில் 52 பந்துகளை ஒரு திசையில் இருந்து எதிா் திசைக்கு கால்களால் எடுத்து வீசி உலக சாதனை படைத்தாா். மாணவரின் சாதனையை யுனிவா்சல் அச்சீவா்ஸ் புக்ஸ் ஆப் ரெக்காா்ட்ஸ் மற்றும் ப்யூச்சா் கலாம்ஸ் புக்ஸ் அமைப்புகளைச் சோ்ந்த பாபு பாலகிருஷ்ணன், உமா ஆகியோா் பதிவு செய்தனா். முடிவில், பள்ளி யோகா பயிற்சி ஆசிரியை பிரசன்னா தேவி நன்றி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT