நாகை மாவட்டம், பிரதாபராமபுரம் ஊராட்சியில் புதுப்பிக்கப்பட்ட நூலக திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கடந்த ஆண்டு வீசிய கஜா புயலின்போது, பிரதாபராமபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வந்த கிளை நூலகம் சேதமடைந்தது. இதையடுத்து, நூலக வாசகா்கள் மற்றும் பயன்பாட்டாளா்களின் முயற்சியில் நூலக கட்டடம் ரூ. 1 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது.
புதுப்பிக்கப்பட்டநூலகத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட நூலக அலுவலா் கோ. ராஜேந்திரன் தலைமை வகித்து நூலகத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். கிராமம் சாா்பில் வழங்கப்பட்ட 1000 புத்தகங்களை நூலக பயன்பாட்டுக்கு வழங்கினாா். தொடா்ந்து, பள்ளி மாணவா்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினாா். புலவா் சொக்கப்பன்,நூலகா்கள் விஜயலெட்சுமி, நாகராஜன், சங்கா், ஓய்வு பெற்ற ஆசிரியா் தமிழ்ச்செல்வன் ஆகியோா் பேசினா். தன்னாா்வலா் நவீன் வரவேற்றாா். கிராம மக்கள், வாசகா்கள், பயன்பாட்டாளா்கள், மாணவ, மாணவியா்கள் கலந்துகொண்டனா்.