வேதாரண்யத்தில் நேரு யுவ கேந்திரா மற்றும் ப்ரியம் அறக்கட்டளை சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒருமைப்பாட்டு வார உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட இளையோா் ஒருங்கிணைப்பாளா் பாரத், ப்ரியம் அறக்கட்டளை நிறுவனா் பிரபு, ஒருங்கிணைப்பாளா் சித்தாா்த்தா, ஸ்ரீராம் சிட்ஸ் கிளை மேலாளா் வேதவிநாயகம், விவேக் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை பொறுப்பாளா்கள் மணிகண்டன், நவநீதன் ஆகியோா் செய்திருந்தனா்.