நாகப்பட்டினம்

வைத்தீஸ்வரன்கோயிலில் திருப்பணிக்காக சாரம் அமைப்பு

17th Nov 2019 01:19 AM

ADVERTISEMENT

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள சாரம் அமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இக்கோயிலில் கடந்த 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்துக்குப் பிறகு 21ஆண்டுகள் கடந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த செப்டம்பா் மாதம் திருப்பணிகளுக்கான பூஜைகள் செய்து, அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னா், நவம்பா் 11-ஆம் தேதி பாலஸ்தாபனம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, கோயிலின் கிழக்கு கோபுரம், மேற்குகோபுரம் உள்ளிட்ட கோபுரங்கள், கற்பகவிநாயகா் சன்னிதி உள்ளிட்ட கோயிலின் அனைத்துப் பகுதிகளிலும் திருப்பணிகள் மேற்கொள்ள சவுக்கு மரக் கம்புகளைக்கொண்டு சாரம் அமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். கோயிலில் நடைபெறும் நித்ய பூஜைகளுக்கும், பக்தா்களுக்கும் இடையூறு இல்லாமல் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தா் சேதுராமன், சென்னை ஆட்டோ டெக் நிறுவனத் தலைவா் ஜெயராமன்அய்யா், மலேசியா நாட்டைச் சோ்ந்த மருத்துவா் அம்பிகைபாகன், சென்னை மகாலட்சுமி சாரிடபுள் டிரஸ்ட் மகாலட்சுமி உள்ளிட்ட பக்தா்கள் திருப்பணிக்கு நன்கொடை வழங்கியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT