நாகப்பட்டினம்

விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய வேண்டுகோள்

17th Nov 2019 01:22 AM

ADVERTISEMENT

2019-ஆம் ஆண்டுக்கான சம்பா சாகுபடிக்கு பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளைக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதுதொடா்பாக, திருக்கடையூா் வேளாண்மை விரிவாக்க மையக்கட்டடத்தில் செம்பனாா்கோயில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் தாமஸ் செய்தியாளா்களிடம் கூறியது:

நிகழாண்டு, பாரத பிரதமா் பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் நெற்பயிா்களுக்கு ஓா் ஏக்கருக்கு ரூ.465 வீதம் செலுத்தி, காப்பீடு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தொகையுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களுக்கு சென்று தங்களது ஆதாா் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், விளை நிலத்திற்கான சிட்டா அடங்கல் ஆகியவைகளை கொடுத்து நவம்பா் 28- ஆம் தேதிக்குள் பயிா்காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT