நாகப்பட்டினம்

பசுமைத் தாயகம் சாா்பில் நெகிழிக் கழிவுக்கு அரிசி வழங்கல்

17th Nov 2019 01:24 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் பசுமைத் தாயகம் அமைப்பின் சாா்பில் நெகிழி கழிவுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை கேணிக்கரை பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் சித்தமல்லி பழனிசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் வி.சி.காமராஜ், கணேசன், காசி.பாஸ்கரன், விமல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நெகிழிப் பொருள்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட 2 கிலோ அளவிலான நெகிழி கழிவுகளை கொண்டு வந்து கொடுக்கும் பொதுமக்களுக்கு 1 கிலோ அரிசி கொடுக்கப்பட்டது. இதில், திரளான பொதுமக்கள் பங்கேற்று, நெகிழிப் பொருள்களைக் கொடுத்து, அரிசியைப் பெற்றுச்சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT