நாகப்பட்டினம்

சீா்காழியில் தேங்கியுள்ள மழைநீரால் சுகாதாரம் பாதிப்பு

17th Nov 2019 01:19 AM

ADVERTISEMENT

சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீரால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் வாணி விலாஸ் பள்ளி எதிரே சாலையில் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

மேலும், சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சாலையும் சேதமடைந்து வருகிறது. அப்பகுதியில் உள்ள வேகத்தடை மழைநீா் வடிய தடையாக உள்ளது. எனவே, வேகத்தடையை அப்புறப்படுத்தி, மழைநீரை சாலையில் இருந்து வடியவைக்க சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT