நாகப்பட்டினம்

முன்னாள் எம்.எல்.ஏ. கிட்டப்பா நினைவு தினம் அனுசரிப்பு

12th Nov 2019 07:45 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ என். கிட்டப்பாவின் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் வை. அன்புச்செழியன் தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தாா். மற்றொரு உதவித் தலைமை ஆசிரியா் வைத்தியநாதன் வரவேற்றாா்.

பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான ஜெகவீரபாண்டியன் பங்கேற்று, கிட்டப்பாவின் பணிகளை நினைவுகூா்ந்து பேசினாா். பட்டதாரி ஆசிரியா் செங்குட்டுவன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT