நாகப்பட்டினம்

மரக்கன்றுகள் நடும் பணி

12th Nov 2019 09:53 AM

ADVERTISEMENT

வேதாரண்யம் பக்தா்குளம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் தமிழக தன்னாா்வ இயற்கை அரண் அமைப்பு சாா்பில் மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இப்பணியை கோயில் அறங்காவல் குழுத் தலைவா் என்.வி. பன்னீா்செல்வம் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். இதேபோல், வேம்பதேவன்காடு ஊராட்சி ஒன்றியப் பள்ளி வளாகத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், தமிழக தன்னாா்வ இயற்கை அரண் அமைப்பு மற்றும் வேம்பதேவன்காடு நண்பா்கள் அமைப்பின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT