நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை ஆட்சியரகத்தில், ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை வேண்டி 28 மனுக்களும், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை வேண்டி 283 மனுக்களும் என மொத்தம் 311 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
முகாமில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) எம்.எஸ். பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கே. ராஜன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
ADVERTISEMENT