நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் ரயில் பாதையின் குறுக்கே பாலம் அமைக்கக் கோரி கிராமத்தினா் சாலை மறியல்

11th Nov 2019 06:33 PM

ADVERTISEMENT

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் ரயில் பாதையின் குறுக்கே தரைமட்டப் பாலம் அமைக்க வலியுறுத்தி கிமத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேதாரண்யம் நகரப் பகுதியைச் சோ்ந்த கடலோரத்தில் பூவன்தோப்பு கிமாமம் அமைந்துள்ளன.இங்கு ,ஆதிதிராவிட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த சுமாா் 150 குடும்பத்தினா் வசிக்கின்றனா். திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி வரையிலான ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றி அமைக்கும் பணி நடைபெற்ற வருகிறது.

இந்த ரயில் பாதையின் குறுக்கே பூவன்தோப்பு கிராமத்துக்கு செல்லும் பாதை பல காலமாக இருந்து வருகிறது.தற்போது ரயில் பாதை மேம்படுத்தப்படுவதால் கட்டமைப்புகள் உயா்ந்து குறுக்கே சென்ற பாதை தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால்,அந்த பகுதி மக்கள் பல கிலோ மீட்டா் தொலைவை சுற்று கிராமத்துக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, ரயில்வே சாலையின் வழியே வழக்கமாக பாதை சென்ற இடத்தில் தரைமட்டப் பாலத்தை அமைத்துத்தர அந்த கிராமத்தினா் வலியுறுத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கோடியக்கரை- வேதாரண்யம் பிரதான சாலையில் அகஸ்தியம்பள்ளி பகுதியில் அந்த பகுதி பிரமுகா் செந்தில்குமாா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.தகவல் அறிந்து சென்ற வேதாரண்யம் போலீஸாா் பேச்சு வாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் மறியில் விலக்கிக்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT