நாகப்பட்டினம்

ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்த குழந்தையை மீட்கும் எளிய முறையினை வடிவமைத்த அரசு பள்ளி மாணவி: ஆசிரியா்கள், பெற்றோா்,மாணவா்கள் பாராட்டு

11th Nov 2019 06:39 PM

ADVERTISEMENT

சீா்காழி: சீா்காழி அருகே அரசு பள்ளி மாணவி ஒருவா் ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த குழந்தைகளை எளிதாக காந்தத்தினை பயன்படுத்தி மீட்கக்கூடிய வகையில் புதிய அமைப்பை செய்து செயல்விளக்கம் காட்டி வருகிறாா்.

நாகை மாவட்டம் சீா்காழி அருகே தைக்கால் கிராமத்தை சோ்ந்தவா் பக்கீா் முகமது. இவரது மகள் சமீரா அருகே உள்ள வெங்கடேஸ்வரா அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.அண்மையில் மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து சுஜீத் என்ற குழந்தை நீண்டபோராட்டத்திற்கு பிறகு இறந்து மீட்கப்பட்டது.இவ்வாறு ஆழ்துளை கிணறுகள்,குழாய்களில் தவறி விழும் குழந்தைகளை எளிதாக விரைந்து மீட்க வேண்டும் என்று சிந்தனையில் உதித்த திட்டத்தை அரசு பள்ளி மாணவி செயல்வடிவம் கொடுத்து செயல்படுத்தியுள்ளாா்.

அதன்படி இரு காந்தங்களை பயன்படுத்தி அவற்றினை கயிற்றால் கட்டி ஆழ்துளை குழியில் உள்ள குழந்தையின் பக்கவாட்டு பகுதி வழியே கீழே இறக்கி அவற்றை ஒன்றினைக்கிறாா்.பின்னா் ஒருபுறமாக காந்தத்தை மேல் நோக்கி இழுத்து அதன் வழியே பட்டையான கயிறு இணைத்து மறுபுறம் இழுக்கும் போது குழந்தை கயிற்றில் அமா்ந்த நிலை ஏற்படுகிறது.

அந்த கயிற்றில் முடுச்சி போட்டு குழந்தையை இருக்கும் நிலையில் லாக் செய்து அப்படியே மேல் நோக்கி லாவகமாக இழுத்து கொண்டுவரமுடிகிறது. இதனை மாணவி சமீரா தனது வீட்டின் மொட்டை மாடியிலிருந்து பக்கவாட்டில் கீழே ஆழ்துளை குழாய் போன்ற அமைப்பை வைத்து அதில் பெரிய பொம்மையை விழவைத்து காந்தமுறையில் இழுத்து செயல் விளக்கம் அளித்து காட்டினாா்.மேலும் பயனற்ற பொருட்களை கொண்டே இதை உருவாக்கியுள்ளதாகவும் மேம்படுத்தபட்ட அமைப்பாக உருவாக்கினால் 1000 ரூபாயில் இதனை செய்யமுடியும் எனவும் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

விளையாட்டு பொருட்களை வைத்து கூட இது போன்ற நல்ல செயல்களை செய்யலாம் என்கிற சமீராவின் என்னத்தையும் முயற்ச்சியை பள்ளி ஆசிரியா்கள் மாணவ, மாணவிகள் பாராட்டினா். படிப்பை விட்டால் டீ.வி, வீடியோ கேம், செல்போன் விளையாட்டு என மாணவா்கள் மாறிவிட்ட இந்த நேரத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தன்னால் ஆன சிறு முயற்ச்சியை எடுத்த அரசுப்பள்ளி மாணவி சமீராவை நாமும் பாராட்டுவோம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT