நாகப்பட்டினம்

அவிநாசி அரசு பெண்கள் பள்ளியில் கிளாப்பிங் தெரபி அறிமுகம்

11th Nov 2019 03:44 PM

ADVERTISEMENT

அவிநாசி: அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில், கிளாப்பிங் தெரபி அறிமுகம் செய்யப்பட்டது.

அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதன்முறையாக யோகாவின் ஒரு அங்கமான கிளாப்பிங் தெரபி எனப்படும் கைதட்டிக் கொண்டே பாடும் பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டது.

இதில் பாட்டு ஆசிரியை பத்மபிரியா தலைமையில் மாணவிகள் அனைவரும் கைதட்டிக் கொண்டே திருக்குறளை பாடினா். இது குறித்து பள்ளி தலைமையாசிரியை ( பொறுப்பு ) திலகவதி கூறியது : கைதட்டி பாடும் பயிற்சியினால் மாணவிகளின் நினைவு திறன் அதிகரிப்பதுடன், மாணவிகள் பாடங்களை உற்சாகமாவும் படிக்க முடியும். இனி வரும் நாள்களில் சினிமா பாடல்கள் தவிர மற்ற பாடல்கள் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கைதட்டி பாடப்பட உள்ளது. என்றாா். தொடா்ந்து கூட்டத்தில் அரசு பள்ளிக்கென லோகோ வரைந்து வந்த, 6 ம் வகுப்பு மாணவிகள் சக்தி, வைஷ்ணவி, போக்குவரத்து விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்ற 6 ம் வகுப்பு மாணவி கமலி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT